மாவட்ட செய்திகள்

செம்பட்டி அருகே, 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த, ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் போக்சோவில் கைது

செம்பட்டி அடுத்த, சித்தையன்கோட்டை அருகே, 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த, போடிக்காமன்வாடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்

          திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த, சித்தையன்கோட்டை அருகே போடிகாமன்வாடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த, விஜய்பழனி (53) இவர், செம்பட்டி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, தனியாக அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

        இதுகுறித்து, செம்பட்டி காவல்துறையினர் முதல் கட்ட விசாரணை நடத்தினர். பின்னர், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, போடிகாமன்வாடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் விஜய்பழனி என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவரை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

        செம்பட்டி அருகே, போடிகாமன்வாடி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.