மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் குளத்துப்பட்டியில் புதிய தார் பிளாண்ட் அமைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு...?

திண்டுக்கல் மாவட்டம் குளத்துப்பட்டியில் புதிய தார் பிளாண்ட் அமைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு...? நிலத்தடி நீர், குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும் என அச்சம்

          திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா குளத்துப்பட்டி ஊராட்சியில் புதியதாக தார் பிளாண்ட் அமைக்கப் படுவதால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

        இதனால் குளத்துப்பட்டி ஊராட்சியில் உள்ள அச்சங்குளம், ஏ. டி காலனி, செம்பாறைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்.

          இதே நிறுவனம் தென்னம்பட்டி, ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் செயல்பட்டு வந்ததும் அங்கு விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக மூடிவிட்டு இங்கு வந்து எங்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக்க துடிக்கிறார்.

         தமிழக அரசு இந்நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பேணிகாக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறார்.

செய்தி: குருபாண்டியன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.