மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு ஊராட்சியில் குடிதண்ணீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு ஊராட்சியில் 2 வது வார்டு பகுதியில் குடிதண்ணீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல்

          திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு ஊராட்சியில் 2 வது வார்டு பகுதியில் குடிதண்ணீர் வராததால் பொதுமக்கள் சாலை மறியல் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட சித்தரேவு ஊராட்சி இந்த ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன இங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிதண்ணீர் வசதி .சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்த வருகின்றனர்.

          பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சித்தரேவு இரண்டாவது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு 20 நாட்களுக்கு மேல் குடிநீர் வழங்காததை கண்டித்து சித்தரேவு வத்தலகுண்டு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி செயலாளர் மற்றும் பட்டிவீரன்பட்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊழிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட செய்தனர் இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு சரி செய்யப்பட்டது

 செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.