வத்தலக்குண்டு அருகே, தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, சமையல் கேஸ் சிலிண்டரை தூங்கிச்சென்ற, மகளிர் சுய உதவிக் குழு தலைவி, தனியார் நிதி நிறுவன உரிமையாளர் என 2 பேர் கைது.
வத்தலக்குண்டு அடுத்த, அழகாபுரியில் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவருக்கு கொலை மிரட்டல் விடுத்து, சமையல் கேஸ் சிலிண்டரை சட்டவிரோதமாக தூக்கிச் சென்ற மகளிர் சுய உதவி குழு தலைவி, தனியார் நிதி நிறுவன உரிமையாளர் ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அடுத்த, மல்லணம்பட்டி அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராமு (50) இவருக்கு சசிகலா (45) என்ற மனைவியும் தேவதர்ஷன் (19) என்ற மகனும், ரித்திகா (17) என்ற மகளும் உள்ளனர். ##இதில் ரித்திகா அந்த பகுதியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சசிகலா மகளிர் சுய உதவி குழு தலைவி நாகலட்சுமி (37) என்பவர் மூலம் வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 40 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். கடந்த மாதம் கடன் தவணைத் தொகையை சசிகலா கட்ட முடியவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மகளிர் சுய உதவிக் குழு தலைவி நாகலட்சுமி மற்றும் வத்தலக்குண்டு தனியா நிதி நிறுவன உரிமையாளர் தியாகராஜன் (32) ஆகிய இருவரும் அழகாபுரியில் உள்ள சசிகலா வீட்டுக்கு சென்று, பள்ளி மாணவியான சசிகலாவின் மகள் ரித்திகாவிடம், கூலித்தொழிலாளி ராமு மற்றும் சசிகலாவை கேட்டுள்ளனர். அப்போது, பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்று இருப்பதாக மாணவி ரித்திகா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடன் தவணைத் தொகையை செலுத்தவில்லை எனக்கூறி, சசிகலாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து, சமையல் கேஸ் சிலிண்டரை சட்ட விரோதமாக, மகளிர் சுய உதவி குழு தலைவி நாகலட்சுமி தூக்கிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சசிகலா வத்தலக்குண்டு காவல் நிலையத்திற்கு கொடுத்த புகாரின் பேரில், மகளிர் சுய உதவி குழு தலைவி நாகலட்சுமி மற்றும் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் தியாகராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.