தேனி ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா
தேனி அல்லிநகரம் பகவதி அம்மன் கோவில் தெருவில் ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா 01.05.2026 இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் தேனி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், ஜெயமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் சப்பானி அங்கம்மாள் விழாவினை துவக்கி வைத்தார்,
மேலும் குத்து விளக்கினை 5- வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் ஏற்றி வைத்தார், 6-வது வார்டு கவுன்சிலர் அனுசியா மற்றும் பல சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழா ஏற்பாட்டினை சங்கத்தின் தலைவர் செயளாலர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் செய்திருந்தனர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.