புகார் செய்திகள்

தேனி மாவட்ட கல்வி அலுவலர் மீது வழக்கறிஞர் புகார்

தேனி மாவட்டம் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க பல லட்சம் லஞ்சம் கேட்கும் மாவட்ட கல்வி அலுவலர்

         தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களில் முறையாக அனுமதி பெறாமல் நடைபெறும் பள்ளிகளை தேனி மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டார். #

          இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள 2 தனியார் பள்ளிகளில் அனுமதி சான்றும், எந்தவிதமான தடையில்லாச் சான்றும் பெறாமல் பள்ளி நடைபெற்று வருவது தெரிய வந்ததை தொடர்ந்து தேனி மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் என்பவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர்/ பள்ளி நிர்வாகத்திடம் பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதாக வழக்கறிஞர் மனோகரன் புகார் தெரிவித்துள்ளார்.

        அவர் தெரிவித்துள்ள புகாரில் தேனி மாவட்டத்தில் பிரபலமான தனியார் பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சண்முகம் என்போர் ஆய்வு மேற்கொண்டார் அப்படி ஆய்வு மேற்கொண்ட போது பள்ளிகளுக்கு தேவையான கட்டிட அனுமதி, தீயணைப்பு துறை தடையில்லா சான்று மேலும் பல அனுமதி சான்றிதழ்களை அரசு தரப்பில் இருந்து கல்வி நிறுவனங்கள் பெறவில்லை என்பது அவருக்கு தெரிய வந்தது, இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட வேண்டுமென்றால் எனக்கு பணம் கொடுங்கள் என்று கேட்டதாகவும் இல்லை என்றால் தன்னுடைய மகனது திருமணச் செலவு மொத்தத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என கோரிக்கை விடுத்ததாகவும் இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் திருமண செலவு மொத்தத்தையும் ஏற்றுக் கொண்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

          அரசுக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தெரியக்கூடிய மாணவ மாணவியர்களின் EMIS என்ற எண் எவ்வாறு மற்ற பள்ளி கல்லூரிகளுக்கு வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்புகிறார், மேலும் அவர் தாளாளராக இறுக்கக் கூடிய

பி. சி. பட்டி CEOA பள்ளியில் பயிலக்கூடிய மாணவ மாணவியர்களின் தகவல்களை எடுப்பதற்கு தன்னுடைய அலைபேசி நம்பருக்கு வரக்கூடிய OTP இல்லாமல் எப்படி அனைத்து தகவல்களும் வேறு நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்றும் கேள்விஎழுப்பி உள்ளார்.

        மேலும் தன்னுடைய கல்வி நிறுவனமான CEOA பள்ளியில் எந்த ஒரு வழக்கும் கல்வி நிறுவனங்களின் ஏஜென்சி மூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை, கட்டிட அனுமதிக்காக கட்டிடத்தின் உரிமையாளர் வழக்கு தொடுத்ததை கல்வி அலுவலர் கையில் வைத்துக் கொண்டு கல்வி நிறுவனத்தின் மேல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று அளக்களிப்பு செய்து பணம் பறிக்கும் எண்ணத்தில் மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர் சண்முகம் செயல்படுவதாகவும் இத்தகைய சூழ்நிலையில் சுமார் 4000 மாணவ மாணவிகள் பயிலக்கூடிய பள்ளியில் உள்ள மாணவ மாணவியர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

        மேலும் அவர் மற்ற நிறுவனங்களில் லஞ்சம் பெற்றதற்கான முழு ஆதாரமும் தன்னிடம் உள்ளதாகவும் இவர் மீது விசாரணை மேற்கொள்ளும் பட்சத்தில் அத்தனை ஆதாரங்களையும் சமர்ப்பிக்க தயாராக உள்ளதாகவும் வீடியோ மூலம் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் தெரிவித்துள்ளார்.

குறிப்பு: 

           இந்த செய்தி குறித்து பள்ளிக் கல்வித் துறை அலுவலர் சண்முகம் விளக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் அதையும் வெளியிடுவதற்கு 3 ஸ்டார் நியூஸ் தமிழ் நிறுவனம் தயார் நிலையில் உள்ளது.

செய்தி: பிரதீப்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.