தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி யில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்பொழுது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக இரண்டு முறை உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் மருந்து பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களின் விலைவாசி கள் உயரக்கூடிய அபாயம் உள்ளது. ஆகவே பெட்ரோல் டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆண்டிபட்டியில் 20.05.26 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி வெங்கடேசன் தலைமை தாங்கினார்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் மக்கள் விரோத கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்
செய்தி: பாண்டீஸ்வரன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.