திண்டுக்கல் மாவட்டத்தில் பல வருடமாக ஊர் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த அரசு புறம்போக்கு நிலத்தை பட்டா போட்ட வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட எம் புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தங்களது பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை பல வருடங்களாக தங்களது பகுதியில் உள்ள மக்கள் கோயில் திருவிழாவிற்கும் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் பயன்படுத்தி வந்த நிலையில் தங்களது பகுதியில் இல்லாத நான்கு நபர்களுக்கு திடீரென 30 சென்ட் நிலத்தை பட்டா போட்டு வழங்கியதால் அரசு அடையாள அட்டையான ரேஷன் கார்டு ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளை ஒப்படைக்க வந்ததாக கூறினர்
மேலும் அவர்கள் கூறும் பொழுது தங்களது கிராமத்தில் இல்லாத நான்கு நபர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி நேரடி தலையீட்டில் எங்களது பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 30 சேர்ந்த நிலத்தை பி ராஜா உள்ளிட்ட நான்கு நபர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பட்டா வழங்கியதாகவும்
இதனைத் தொடர்ந்து தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தபோது பட்டாவை நாங்கள் அமல்படுத்தவில்லை டிஆர்ஓ தான் செய்துள்ளார் என்று கூறியுள்ளதாகவும் இதனால் எம் புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது அரசு அடையாள அட்டை ஒப்படைத்து விட்டு நாங்கள் அப்பகுதி உள்ள மலைக்கு செல்கிறோம் நாங்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை யாரோ ஒருவருக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பட்டா போட்டு வழங்கியுள்ளார் அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் அடுத்த கட்டமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறினார்
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.