தமிழக அரசியலை புரட்டி போட்ட தமிழக வெற்றி கழகம்
தமிழக முழுவதும் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று 04.05.2026 வெளிவந்த சூழ்நிலையில் தமிழகத்தில் யாரும் எதிர் பாராத உலக சாதனை என்று கூறக்கூடிய அளவில் தமிழக வெற்றி கழகம் பெற்றது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய ஒரு ஆச்சரியத்தையும் அதிர் வலையையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்க மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படும் பட்சத்தில் யார் இந்த இடத்தை நிரப்ப போகிறார்கள் என்ற கேள்வி குறியும், எதிர்க்கட்சி அந்தஷ்தை பெறக் கூடியவர் யார், கூட்டணி ஆட்சி அமையுமா என்றும் பல்வேறு கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. புதிய முதல்வர், புதிய அமைச்சர்கள், புதிய சட்டமன்ற உறுப்பினர்கள்,என அனைவரும் புதிய வர்களாக இருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாட்டை எப்படி இவர்கள் வழிநடத்தி செல்வார்கள் என்ற கேள்விக் குறியும் எழுந்துள்ளது.
எதுவாயினும் சரி மாற்றம் தேவை என்ற சிந்தனை புதிய வாக்காளர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது என்பதை அனைவரும் இந்த சட்டமன்றத் தேர்தலில் புரிந்து கொண்டனர். மேலும் என் வாக்கு விலைக்கு அல்ல என்ற மாபெரும் கருத்து வெற்றி பெற்றது அரசியல் வட்டாரங்களில் புரட்சியை கிளப்பியுள்ளது என்பதை அனைத்து அரசியல் பிரமுகர்களும் புரிந்து கொண்டனர்.
3 ஸ்டார் நியூஸ் தமிழ் சேனல் ஆசிரியர் & வெளியிட்டார்,துணை, இணை ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்கள் சார்பாக தமிழ்நாட்டின் புதிய முதல்வர், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும் அவருடன் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும், திமுக கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்
செய்தி : ஆசிரியர் & வெளியீட்டாளர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.