மாவட்ட செய்திகள்

திருச்செந்தூரில்- அமைச்சரிடம் VIP தரிசனம் செய்ய பணம் கேட்ட கோவில் அர்சகர்கள்

திருச்செந்தூர் - ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைச்சர் என்று தெரியாமல் அர்ச்சகர் செய்த செயல்

திருச்செந்தூர் - ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வரும் விஐபி (VIP) மற்றும் சாதாரண பக்தர்களிடம் விரைந்து தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி, சிலர் பெருமளவில் சட்டவிரோதமாகப் பணம் வசூலிப்பதாகப் பரவலாக பக்தர்கள் மத்தியில் புகார்கள் எழுந்த நிலையில். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சாதாரண பக்தரைப் போல டிசர்ட் அனிந்து தனது குழுவினருடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளார்.

       அப்போது அங்கு வந்த சில அர்ச்சகர்கள், சிறப்பு விஐபி தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி அமைச்சரிடம் ரூ.4,000 கேட்டுள்ளனர். உடனடியாக அமைச்சர் ஆன்லைனில் அவர்கள் கொடுத்த மொபைல் எண்ணிற்கு GPay மூலம் ரூ.4,000-ஐ அனுப்பியுள்ளார்.

        ஆன்லைன் பரிவர்த்தனைக்கான            (GPay Receipt) டிஜிட்டல் ஆதாரங்கள் அச்சு அசலாகக் கையில் சிக்கியதால், சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மாட்டுக்கொண்டனர். @இதனை தொடர்ந்து அர்ச்சகர்கள் மீது துறை ரீதியான சட்ட நடவடிக்கை எடுக்கு அமைச்சர் தற்போது உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.