தேனி மாவட்டம் பி.சி.பட்டியில் இயங்கி வந்த CEOA பள்ளி நிர்வாகத்தின் கீழ் தங்களது குழந்தைகள் பயில வலியுறுத்தி மாவட்ட கல்வி அலுவலரிடம் பெற்றோர்கள் கோரிக்கை மனு
தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டியில் இயங்கி வந்த பெனடிக் மேல்நிலைப்பள்ளி செல்வ மனோகரன் என்பவர் கட்டுப்பாட்டின் கீழ் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் உள்ள பிரபல கல்வி நிறுவனமான CEOA என்ற கல்வி நிறுவனத்தின் கீழ் இந்த பள்ளி சில நிபந்தனைகளுடன் ஒப்பந்தத்தில் இயங்கியதாக கூறுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டு நிர்வாகத்திற்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கட்டிடத்தை விட்டு வெளியேறுமாறு பெனடிக் பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில் CEOA பள்ளி நிர்வாகம் மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் பெனடிக் பள்ளி வளாகத்திலேயே CEOA பள்ளியை நடத்த அனுமதி வழங்கப்பட்டது .
தற்போது பெனடிக் பள்ளி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை அனுகி W.P(MD). No. 6058 of 2026 & W.P Crl.(MD) No. 2730 of 2026 CEOA பள்ளி நிர்வாகத்தை அவர்களது வளாகத்தில் இருந்து வெளியேற்ற உத்தரவு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் CEOA பள்ளி நிர்வாகத்தின் கீழ் குழந்தைகள் பயில வேண்டும் என்ற மனதோடு 15.10.26 அன்று மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெனடிக் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர் மேலும் மாவட்ட கல்வி அலுவலர் ( தனியார் பள்ளிகள்) பணம் பெற்று கொண்டு பெனடிக்ட் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட தாகவும் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் விதமாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை சந்தித்து CEOA மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக விருப்ப மனு அளித்தனர். அந்த மனுவில் தங்களது குழந்தைகள் CEOA பள்ளி நிர்வாகத்தின் கீழ் இதுவரை பயின்று வந்தனர் தற்போது பள்ளி நிர்வாகத்திற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது மாணவர்களை வேறு பள்ளிகளில் அட்மிஷன் போடுவது என்பது அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 12 வகுப்பு பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் வேறு கல்வி நிறுவனங்களில் பயில்வது என்பது அவர்களது எதிர்காலத்தை பாதிக்கும் என்ற கோரிக்கையை முன்வைத்து மீண்டும் தங்கள் குழந்தைகள் CEOA பள்ளி நிர்வாகத்தின் கீழ் 2026 - 2027 ஆம் கல்வி ஆண்டுக்கு மட்டும் பயில அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதன் மூலம் அவர்கள் எந்த நிர்வாகத்திற்கும் ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ இல்லை என்றும் தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மாணவ மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு CEOA கல்வி நிறுவனம் அனைத்து வசதிகளுடன் கூடிய எந்த கட்டடத்தில் இயங்கினாலும் தற்காலிக அனுமதி தான் வழங்குவதாக கூறியுள்ளதால் தற்காலிகமாக ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது என கூறுகின்றனர் பெற்றோர்கள்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலர் தங்கள் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக CEOA மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
இது குறித்து செல்வ மனோகரன் அவர்களிடம் நாம் விளக்கம் கேட்ட போது எனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை பெற்றோருக்கும் CEOA கல்வி நிறுவனத்திற்கு மட்டுமே தொடர்புள்ளது எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்தார்.
குறிப்பு
மேலும் இந்த செய்தி குறித்து எவரேனும் விளக்கம் தெரிவிக்க முற்பட்டால் அதையும் வெளியிட தயாராக உள்ளது 3ஸ்டார் நியூஸ் தமிழ் நிர்வாகம்
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.