தேனி வருசநாடு மலை கிராம மக்கள் தொடர்ந்து 4வது நாளாக காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது
தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் உள்ள 98 கிராம மக்கள் சுமார் 4 ஆயிரத்திர்க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு தாரர்களை மலைப்பகுதிகளில் இருந்து வெளியேற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருசநாடு மலைப்பகுதி கிராம மக்கள் ஜாதி மதம் இனம் என்ற பாகுபாடு இல்லாமல் தொடர்ந்து நான்காவது நாளாக கடமலைகுண்டு புதிய பேருந்து நிலையத்தில் இரவு பகளாக காத்திருப்பு போராட்டத்தை அஹிம்சை வழியில் ஈடுபட்டு வருகின்றனர்.
##தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பேடபட்ட மறுசீராய்வு மனு மீது விரைந்து விசாரணை செய்து தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
##இந்தப் போராட்டமானது கடந்த
26.09.26 அன்று தொடங்கி இன்று நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது இந்த தொடர் போராட்டத்தில் அரசியல் பாகுபாடு இன்றி அனைத்து கட்சி பிரமுகர்களும் தென் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய கட்சி பிரமுகர்களும்,சமூக ஆர்வலர்கள் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என எந்தவித பாகுபாடும் இன்றி ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று கடமலை - மயிலை கிராமத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.போராட்டங்களில் கலந்து கொள்ள பெண்கள் ஆர்வத்துடன் ஆட்டோ, சரக்கு வாகனம் என அனைத்து வாகனங்களிலும் கூட்டம் கூட்டமாக வந்து கலந்து கொண்டனர்.
##இந்நிலையில் வருசநாடு மேகமலை கிராம பகுதிகளில் உள்ள அனைத்து வனத்துறை அலுவலகங்களுக்கும் வனத்துறை செக்போஸ்ட் உள்ள இடங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.மேலும் அகிம்சை வழியில் போராடும் வருஷநாடு கிராம மக்களாள் ஏதேனும் போராட்டம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சுறுத்தலில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அனைத்தும் பியேரிகாட் போடப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
##காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை பொது மக்களுக்கும் கடமலை மயிலை ஒன்றிய கிராம பொதுமக்கள் சார்பாக உணவு குடிநீர் அனைத்து தேவைகளும் சரியான நேரத்தில் வழங்க்கப்பட்டது.
##நேற்று 29.09.26 உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற மறு சீராய்வு மனு சம்பந்தமான விசாரணையில் தமிழக அரசு வழக்கறிஞர் வருசநாடு மேகமலை பகுதியில் பழக்குடியினர்களை கண்டறிய வனத்துறை மேலும் 2 மாத கால அவகாசம் தேவை என குறிப்பிட்டுள்ளதால் தீர்ப்பு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வருசநாடு கிராம மக்கள் தங்களது காத்திருக்க போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு உள்ளனர்.
கருத்துகள் (0)
Be the first to comment on this article.