மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் மண்டல சிறப்பு கலந்தாய்வு கூட்டம் திருவண்ணாமலை யில் நடைபெற்றது

தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் மண்டல சிறப்பு கலந்தாய்வு கூட்டம் திருவண்ணாமலை யில் நடைபெற்றது

     தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் மண்டல சிறப்பு கலந்தாய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு 04.10.2026 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தை மையமாக வைத்து மாநிலத் தலைவர் புருஷோத்தமன் மாநில பொருளாளர் தங்கபாண்டியன் மாநில செயலாளர் நாராயண ராஜா ஆகியோர் தலைமையில் தனியார் மஹாலில் வேலூர், இராணிப்பேட்டை,கடலூர், திருப்பத்தூர் காஞ்சிபுரம்,விழுப்புரம் கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்டது.

     இந்த விழாவில் மாநில துணை செயலாளர் பிரதீப் தலைமை ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மணிகண்டன் மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் முத்துராமன் மற்றும் சங்கத்தின் மாநில /மண்டலம்/ மாவட்டம் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் நலிந்த பெண்களுக்கு விலையில்லா சேலையும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பேனா பென்சில் நோட்புகள் வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் சங்கத்தின் வளர்ச்சி குறித்து முக்கிய முடிவுகள் என கலந்துரையாடல் நடைபெற்றது.

     விழாவின் ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட தலைவர் தாஸ்,மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி மாவட்ட பொருளாளர் சசிகுமார்,தாலுகா தலைவர் ஆனந்தகுமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்

 

செய்தி: இளையவன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.