சேலம் டேனிஷ்பேட்டை ரயில் நிலையத்தில் அரக்கோணம் - சேலம் மெமு ரயில் நிறுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி வட்டம் டேனிஷ்பேட்டை ரயில் நிலையத்தில், கொரோனா காலத்திற்கு முன்பு நின்று சென்ற அரக்கோணம் – சேலம் மெமு ரயிலுக்கு மீண்டும் நிரந்தர நிறுத்தம் வழங்கக் கோரி டேனிஷ்பேட்டை பழைய ரயில்வே கேட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வாரத்தில் 7 நாட்களும் இயக்கம் தற்போது 5 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ள இந்தச் சேவையை, பயணிகள் நலன் கருதி வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்க வேண்டும். அரக்கோணம் – ஜோலார்பேட்டை மெமு ரயிலை (16085 / 16086) சேலம் வரை நீட்டித்து, டேனிஷ்பேட்டையிலும் நிறுத்த வேண்டும் என்று எண்ணற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
காடையாம்பட்டி தாலுகா தலைமை அலுவலகத்திலிருந்து வெறும் 4 கி.மீ தொலைவில் உள்ள டேனிஷ்பேட்டை ரயில் நிலையம், இப்பகுதி மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களின் அன்றாடப் பயணங்களுக்கு முதுகெலும்பாக விளங்குகிறது.
கொரோனா தொற்று காலத்தில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட இந்த மெமு ரயில் நிறுத்தம், தொற்று முடிவடைந்தும் இதுவரை மீண்டும் வழங்கப்படவில்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் விடுத்த தொடர் கோரிக்கைகள் தென்னக ரயில்வே நிர்வாகத்தால் கண்டுகொள்ளப்படாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம். ரயில்கள் நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.
டேனிஷ்பேட்டை ரயில் பயணிகள் சங்கத் தலைவர் C.ராமன், செயலாளர் M.வெங்கடேசன், பொதுச்செயலாளர் JPR, பொருளாளர் S.கோபாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் P.ரமேஷ் மற்றும் பொறுப்பாளர் முருகேசன் ஆகியோர் தலைமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு ரயில் பயனாளர்கள் கூட்டமைப்புச் செயலாளர் ஜெபசிங், துணைச் செயலாளர் முனிரத்தினம், பொம்மிடி ரயில் பயணிகள் சங்கத் தலைவர் அறிவழகன், ஆசாம்கான், சங்கீதாஸ்ரீ, இளங்கோவன், அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர் .
செய்தி: சித்தையன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.