மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கஞ்சா விற்பனை செய்துவந்த கேரளாவைச் சேர்ந்த கணவன் மனைவிகள் என் 4-பேர் கைது,5-கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கஞ்சா விற்பனை செய்துவந்த கேரளாவைச் சேர்ந்த கணவன் மனைவிகள் என் 4-பேர் கைது,5-கிலோ கஞ்சா பறிமுதல்

       திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஜல்லிபட்டி பகுதியில் ஒடிசா மாநிலத்திலிருந்து கடந்திவரப்பட்டு கஞ்சா விற்பனை செய்துவந்த கேரளாவைச் சேர்ந்த கணவன் மனைவிகள் என் 4-பேர் கைது, அவர்களிடமிருந்து 5-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், மாவட்ட எஸ்பி.நேரில் விசாரணை.

       திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள ஜல்லிப்பட்டி பகுதியில் ஒடிசா மாநிலத்திலிருந்து இரயில் மூலம் கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக இரகசிய தகவலின் அடிப்படையில், ##மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி அம்மையநாயக்கனூர் காவல்நிலைய ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான காவல்துறையினர்,

        இன்று காலை திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்,அப்போது சத்தேகத்திற்கு இடமாக இரயில்வே பாலம் அருகே இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது,

        அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த செபாஸ்டின் சனு (38), அவரது மனைது கஸ்தூரி (32), கேரள மாநிலம் கொச்சின் பாலம்பரம்பில் முன்டன் வேலியைச் சேர்ந்த அபிலேஷ் (27), அவரது மனைவி அகிலா (21) ஆகிய நான்கு பேரும் கணவன் மனைவிகள் என்பது தெரியவந்து இவர்கள் அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து, ஒடிசா மாநிலத்திலிருந்து இரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து கொடைரோடு பகுதியில் சில்லரை வியாபாரம் செய்தது தெரியவந்தது.

        அவர்களிடமிருந்து சுமார் 5-கிலே உயர்ரக கஞ்சாவை கைப்பற்றிய அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

        இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இந்தாண்டில் இதுவரை கஞ்சா தொடர்பாக 397 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 640 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் 288 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 16-குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

        மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை சட்டவிரோதமாகக் கடத்துதல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தார்…

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.