திண்டுக்கல் அதிகாரிகள் வந்தும் குறைதீர்க்கூட்டத்துக்கு வராத மாவட்ட ஆட்சியர்...10.30 மணி ஆகியும் பொதுமக்கள் காத்திருக்கும் அவலம்..
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு அதிகாரிகள் வந்துவிட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
வழக்கமாக 10 மணிக்கு எல்லாம் குறைதீர் கூட்டம் தொடங்கும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளிடம் மனுக்களை அளிப்பர்.
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடுவது வழக்கம். ஆனால் கடந்த சில வாரங்களாகவே திண்டுக்கல்லில் உரிய நேரத்துக்கு குறைதீர் கூட்டம் தொடங்குவதில்லை. மேலும் மாவட்ட ஆட்சியர் வருவதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் திங்கட்கிழமை ஆன இன்று 10 மணிக்கு குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது முன்னதாகவே அதிகாரிகள் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் வந்து அமர்ந்து விட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் கோட்டாட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் நீண்ட நேரம் அரசு அலுவலர்கள் காத்திருந்தனர் மேலும் மனு அளிக்கு வந்த பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனர்.
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.