நத்தம் சம்பவம் ஒரே விவகாரத்தில் 2 வழக்குகள் - பாரபட்சமற்ற விசாரணை கோரி திண்டுக்கல்லில் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாக, முத்தரையர் சமூகப் பொதுமக்கள் மீது கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி 14 பேர் மீதும், அக்டோபர் 17-ஆம் தேதி 4 பேர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் பி.என்.எஸ் (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் ஒரே சம்பவத்தின் தொடர்ச்சியாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு காவல் வழக்குகளிலும் பாரபட்சமற்ற உயர்மட்ட விசாரணை நடத்தக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் BC, MBC, DNT மக்கள் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் 300க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது. பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
இரண்டு முதல் தகவல் அறிக்கைகளையும் (FIR) ஒப்பிட்டு ஆய்வு செய்து, தற்போதைய விசாரணை அதிகாரிகளுக்கு அப்பாற்பட்ட உயர்மட்ட காவல்துறை அதிகாரி மூலம் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் எனவும்,
மேலும், குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனத் தெரியவந்தால், சட்டப்படி இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்குகளை முடித்து வைக்க வேண்டும்.
கோமணாம்பட்டி கிராமத்தில் இருதரப்பு மக்களையும் அழைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து சமூக மக்களுக்கும் சமமான நீதி மற்றும் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என கூட்டமைப்பினர் தெரிவித்தனர்
செய்தி: சதீஷ்.
கருத்துகள் (0)
Be the first to comment on this article.