தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் போதைப்பொருள் தடுப்பு, புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, Our CM Our Pride, இணையும் கரங்கள் மற்றும் போடி மேற்கு ஒன்றியம் இணைந்து நடத்திய போதைப்பொருள் தடுப்பு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.
போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரியில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி, ZKM நினைவுப் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, போதைப்பொருள் இல்லாத சமுதாயம் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தேனி மாவட்ட TVK கட்சியின் கழகச் செயலாளர் பிரகாஷ்ராஜ் மற்றும் போடி மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர்கள் கிஷோர், தபு, ராஜேஷ், சதீஷ்குமார், முனீஸ், விஜி, சரத், மேகநாதன், கருப்புசாமி,ஜின்ஸி. நந்தினி, சரோஜா, கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், பள்ளித் தலைவர் செந்தில் தியாகராஜன், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், கழகத்தின் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகிக்கும் நிர்வாகிகள், பெரியோர்கள், பெற்றோர்கள் மற்றும் தாய்மார்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
இளைய தலைமுறையினரிடம் போதைப்பொருள் தடுப்பு மற்றும் நோய் குறித்த விழிப்புணர்வை விதைத்து, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற இம்மாரத்தான் போட்டி நகர மக்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பெரும் பாராட்டையும் பெற்றது.
செய்தி: சாமுவேல் ராஜா
கருத்துகள் (0)
Be the first to comment on this article.