பெரியகுளம் வடுகபட்டியில் அண்ணா 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாள் விழா தேனி கிழக்கு மாவட்டம் பெரியகுளம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் வடுகபட்டி கவிஞர் கண்ணதாசன் நூலகம் அருகில் பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அப்பாஸ் மைதீன் தலைமையில் நடைபெற்றது.
பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பெரியகுளம் நகர செயலாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வடுகபட்டி பேரூர் செயலாளர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.இந்நிகழ்வில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை இராமர், தலைமை கழக பேச்சாளர்கள் பொங்கலூர் மணிகண்டன், டாக்டர் மல்லன், இளம் தலைமை கழக பேச்சாளர் டாக்டர் சுபநிதி சுப்பிரமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் .
தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை இராமர் பேசுகையில்" புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா புரட்சித்தமிழர் எடப்பாடி யார் மற்றும் மாற்று கட்சியில் இருக்கிறவங்க ஆட்சி நடத்தியதை பார்த்திருப்போம். ஆனால் அதுக்கு நேர் எதிராக தற்போதைய விஜய் ஆட்சி அமைந்துள்ளது .
நமது கட்சியில் உள்ளவர்கள் மட்டும் தான் நாம் இரட்டை இலைக்கு வாக்கு செலுத்தினோம் ஆனால் நமது வீட்டில் உள்ள இளைஞர்களையும் இளம் பெண்களையும் நாம் ஓட்டு போட வற்புறுத்தவில்லை அதுதான் நாம் செய்த மிகப்பெரிய தவறு . தவெக வை நாம் போட்டியாளராகவே நினைக்கவே இல்லை நமக்கு திமுக தான் எதிரி என்று கடுமையாக வேலை செய்தோம். அதனால்தான் தான் விஜயால் எளிதாக வெற்றி பெற முடிந்தது . இனிவரும் காலங்களில் நமது உறவினர்களிடமும் உறவினர்களின் பிள்ளைகளிடமும் சொல்லி இரட்டை இலைக்கு வாக்கு செலுத்தி மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதலமைச்சராக ஆக்குவோம் என பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் சபதம் ஏற்போம்" என்று பேசினார்.
தலைமை கழக பேச்சாளரும்,கழக செய்தி தொடர்பாளருமான பொங்கலூர் மணிகண்டன் பேசும்போது " முதலமைச்சர்களின் மிகவும் எளிமையானவர்கள் யார் என்று கேட்டால் பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு நமது எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான் . பெருந்தலைவர் காமராஜர் அவர்களை நாம் புத்தகத்தில் மட்டும் தான் படித்திருப்போம். ஆனால் அவரை நேரில் கண்டதில்லை. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எப்போது வேண்டுமானாலும் எளிதில் சந்திக்கலாம் அவரை பார்ப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் தேவையில்லை . எடப்பாடி யாரின் நான்கு ஆண்டுகால ஆட்சியானது தமிழ்நாட்டின் ஒரு பொற்கால ஆட்சி ஆகும். இன்றைக்கு தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்கிறார் என்ற நமக்கு தெரியும் நடிகர் விஜய் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை
வருகிற தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் எப்படி ஜெயிப்பீர்கள் என்று பார்க்கிறோம். மக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். எனவே வருகிற உள்ளாட்சித் தேர்தல் , கூட்டுறவு சங்க தேர்தல் ஆகிய தேர்தலில் கவனமாக இருந்து செயல்பட்டு அதிக இடங்களில் வெற்றி பெற செய்வோம் அதேபோல் அதிமுக ஒரு எஃகு கோட்டை அந்த எஃகு கோட்டையை தொட்டுப் பார்க்க எந்த கொம்பனாலும் முடியாது என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை துணை செயலாளர் செல்லமுத்து, இணைச் செயலாளர் ஜெயக்குமார், தலைமை கழக பேச்சாளர் சுந்தரபாண்டியன் , கழக மருத்துவர் அணி இணைச் செயலாளர் அனுமந்தன்,மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி , மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் கருப்பசாமி, மகளிர் அணி துணை செயலாளர் பாப்பா இளமுருகன், மகளிர் அணி துணை தலைவர் சித்ரா கலா, மகளிர் அணி துணை செயலாளர் பங்கஜவள்ளி, முன்னாள் நகர செயலாளர் ராதா , அனைத்து உலக எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் சதக்கத்துல்லா , பேரூர் செயலாளர்கள் மனோகரன் (தாமரைக்குளம்), ஆண்டவர் (தென்கரை), மேனகா குமார்(கெங்குவார்பட்டி), ஜபருல்லா (தேவதானபட்டி), மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ரத்தினவேல் , மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஜெயராமன், சேது ராஜேந்திரன், சிவனம்மாள் காமாட்சி, ராஜேந்திரன் , வடுகபட்டி பேரூர் அவைத்தலைவர் பெத்தண்ணசாமி , இணைச் செயலாளர் முத்துலட்சுமி பொன்னிருளன், துணை செயலாளர்கள் ரத்தினம் சண்முகம் , பாலையா , பொருளாளர் வெற்றிவேல் உள்ளிட்ட மாவட்ட ,ஒன்றிய, நகர,பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சியின் முடிவில் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பிரவீன் குமார் நன்றி கூறினார். தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை இராமர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரியகுளம் மேற்கு ஒன்றியம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடினர்.
செய்தி: செந்தில்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.