தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஆதார் ரேஷன் அட்டையை தரையில் எரிந்து சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...
தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட சுருளி ஆறு அருகில் சலவை தொழில் செய்து வரும் சலவை தொழிலாளர்கள் ஆதார் அட்டை ரேஷன் அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த போராட்டத்தில் சலவை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் இதுகுறித்து அச்சுறுத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆற்று நீர் மாசுபடாத வகையில் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சலவை கூடம் அமைக்க தடை இல்லா சான்று வழங்க வேண்டும் என்றும் இதனால் தங்களது வாழ்வாதாரம் இல்லாததை அரசிற்கு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உணர்த்தும் வகையில் குடும்பத்தோடு அரசு வழங்கிய ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை ஒப்படைக்கும் வகையில் தரையில் எரிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சலவை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
செய்தி: பாலகுரு
கருத்துகள் (0)
Be the first to comment on this article.