தேனி ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக தெற்க்கு மாவட்டச் செயலாளர் தந்தைக்கு நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது.
தேனி ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தெற்க்கு மாவட்டச் செயலாளர் மதுரைவீரன் அவர்களது தகப்பனார் சந்தோஷ் அவர்களின் 28-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கட்சியின் அலுவலகத்தில் அன்னாரது திருஉருவ படத்திற்கு மலர் தூவி வீரவணக்க கோஷம் எழுப்பி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மதுரைவீரன் தேனி (தெற்கு) மாவட்டச் செயலாளர் தலைமை தாங்கினார்.தேனி வீரபாண்டியன் (வடக்கு)மாவட்ட செயலாளர் முன்னிலை வகித்தார்.ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தேவதாஸ்,போடி ஒன்றிய செயலாளர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். ##மேலும் தமிழ்ப்புலிகள் கட்சியின் தென் மண்டல (து) செயலாளர் சேகர், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அரசபாண்டியன், இந்திய ஐ.கே. கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் பெத்தாச்சி ஆசத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வெங்கடேசன், புரட்சித்தமிழர் கட்சி (மே) மாவட்டச் செயலாளர் தமிழரசன், திராவிட புரட்சிக் கழகம் மாவட்ட செயலாளர் சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக பொறுப்பாளர் மதன் மற்றும் பூமி மற்றும் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து கட்சி மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், கழக நிர்வாகிகளுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
செய்தி: G.ராஜா
கருத்துகள் (0)
Be the first to comment on this article.