தேனியில் வீரமங்கை குயிலியின் நினைவு நாள் தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பாக நடைபெற்றது
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே வீரமங்கை குயிலியின் நினைவு நாளை முன்னிட்டு ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் மதுரை வீரன் தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் ஜெகதீஷ் குமார் தேவதாஸ் முன்னிலையில் குயிலியி அவர்களின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி வாழ்த்து கோசங்கள் ஏழுப்பி வீர வணக்கம் செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சி பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் புரட்சித் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் அருந்தமிழ் அரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்,
மேலும் தேனி மாவட்ட செயலாளர் சின்ன முத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் அரச பாண்டி, வடக்கு மாவட்ட தலைவர் கந்தன் ஆதித்தமிழர் கட்சியின் தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமசாமி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் தேனி மகேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வெங்கடேசன்,திராவிட புரட்சிக் கழகம் தேனி மாவட்டச் செயலாளர் சந்திரன்,நாடாளு மக்கள் கட்சி தேனி தெற்கு மாவட்ட தலைவர் செல்வம் மற்றும் நாடார் மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் ஜெய் முருகேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.