தேனி காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் மரணத்திற்கு தேனி தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் முன்னேற்ற கழக செயலாளர் கண்டனம் !!!
தீபாவளி பண்டிகை தினத்தன்று இரவு போதையில் இருந்த இளைஞர்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் மரணத்திற்கு தேனி தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் முன்னேற்ற கழக செயலாளர் மதுரை வீரன் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் ஆறுதலையும் தெரிவிப்பதோடு நடைபெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் தேனியில் தற்போது போதை கலாச்சாரம் கொலை கொள்ளை கலாச்சாரம் பெருகி வருகின்ற நிலையில் இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு இல்லாத உணர்வை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் காவல் துறையினருக்கே இந்த நிலைமை என்றால் பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வி ஏற்படுகிறது இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே காவல்துறை தீர விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
இந்த சம்பவத்தில் துரித நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறை ஏடிஜிபி, ஐஜி மற்றும் தேனி எஸ் பி உள்ளிட்ட காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இது போன்ற சம்பவங்கள் தேனி மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடக்காமல் காவல்துறை செயல்பட வேண்டும் என தேனி தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் வலியுறுத்துகிறோம்.
தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் பலபேர் கொலை சம்பவம் அரங்கேறி உள்ளது இது காவல் துறையின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது என்று தேனி தெற்க்கு மாவட்ட ஆதிதமிழர் முன்னேற்ற கழக செயலாளர் மதுரை வீரன் தெரிவித்துள்ளார்.
செய்தி: ராஜா
கருத்துகள் (0)
Be the first to comment on this article.