தேனியில் பள்ளி கட்டிடங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் 1960 பயனாளிகளுக்கு 26.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் வழங்கினார்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் (18.10.2026) நடைபெற்ற அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ரூ.2.82 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில்1960 பயனாளிகளுக்கு ரூ.26.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.சிவகிருஷ்ணமூர்த்தி, அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.
இவ்விழாவில், சட்டமன்ற உ றுப்பினர் க.சபரிஐங்கரன் (பெரியகுளம்), மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், சார் ஆட்சியர் (பெரியகுளம்) தவலேந்து, இ.ஆ.ப., தமிழக வெற்றிக் கழக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ்,துணை இயக்குநர் (திருவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) விவேக்குமார் பி யாதவ் இ.வ.ப., திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) துஷார் ஸ்ரீஹர் ஷிண்டே, இ.வ.ப, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வீராச்சாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெரால்டு அலெக்சாண்டர், பொது மேலாளர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திண்டுக்கல் மண்டலம்) முத்துக்கிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நர்மதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)ராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கவிதா,
த.வெ.க நிர்வாகி செல்லப்பாண்டியன் மற்றும் பல்வேறுதுறை சார்ந்த மாவட்ட நிலையிலான அரசு அலுவலர்கள், தவெக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.