தேனி அருகே வீரபாண்டியில் மாவட்ட அதிமுக புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் ஆலோசனைக் கூட்டம்
ஒருங்கிணைந்த தேனி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தேனி அருகே வீரபாண்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார் தலைமை தாங்கினார் . அதிமுக தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர், மேற்கு மாவட்ட செயலாளர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .தேனி கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர்கள் கரிகாலன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கழக புரட்சித் தலைவர் அம்மா பேரவை மாநில செயலாளர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில்" தேனி மாவட்டம் மூன்று முதலமைச்சர் தந்த மாவட்டமாகும். அதிமுக 54 கால அரசியல் பயணத்தில் பல தோல்விகளையும் பல வெற்றிகளையும் கண்டது. அதிமுக தொண்டர்கள் கட்சி என்று வந்தால் உயிரை கொடுக்கவும் தயாராக இருப்பார்கள் .
அப்படிப்பட்ட கட்சியில் தான் ஒரு சாமானியான கிளைச் செயலாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக உச்சம் தொட்டவர். இன்றைக்கு ஆளக்கூடிய முதலமைச்சர் விஜய் அரசியல் அறியாமையால் வந்தவர். ரீல்ஸ் வந்ததால் ரியல் காணாமல் போனது. லைக் எதிர்பார்த்ததால் லைஃப் இல்லாமல் போனது. கடந்த 80 ஆவது சுதந்திர தின விழாவில் முன் இருக்கையில் நடிகை திரிஷா அமர்ந்திருந்தார். அவருக்கு இவர் வணக்கம் வைக்க இவருக்கு அவர் வணக்கம் வைக்க இந்த நிலைமையை சுதந்திரப் போராட்ட தியாகிகள் பார்த்திருந்தால் என்ன ஆகிருக்கும். அதிமுக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களில் பல அமைச்சர்களை பார்த்த இயக்கம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கி புரட்சித்தலைவி ஜெயலலிதா வளர்த்து புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் கட்டி காத்த இயக்கம் அதிமுக. இந்த இயக்கத்தை முதலமைச்சர் விஜய் அழிக்க நினைத்தால் அவர்தான் இந்த தேர்தலோடு காணாமல் போய்விடுவார் .
சட்டமன்றத்தில் பல தலைவர்கள் கண்ணியமான முறையில் உரையை நிகழ்த்துவார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை சினிமாவில் இருந்து வந்தவர் என்பதால் படத்தில் நடிப்பது போலவே ஆசனோடு சட்டமன்றத்தில் செயல்படுகிறார் அவரை இந்த நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள். தங்களுடைய பேரக்குழந்தைகள் அடம்பிடித்து விஜய்க்கு ஓட்டு கேட்டதால் தமிழ்நாடு சீரழிந்து விட்டது வருகிற இடை தேர்தலில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நமக்கு துரோகம் இழைத்தவர்களை தோல்வி அடைய செய்து எடப்பாடி பழனிச்சாமி கரத்தை வலுப்படுத்துவோம். நம்முடைய கட்சிக் கூட்டத்திற்கு 10 பேரும் வந்தாலோ நூறு பேர் வந்தாலோ அல்லது லட்சம் பேர் வந்தாலோ உண்மையான கட்சியைக்காரர்களை அழைத்து வாருங்கள் . ஏதோ செயற்கையாக ஆட்களை வரவழைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்று தலைமை அறிவுறுத்தியுள்ளது. இனி வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி கரத்தை வலுப்படுத்துவோம்" என்று பேசினார் . இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் ஜக்கையன், கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் செல்லமுத்து, அம்மா பேரவை மாநில துணை செயலாளர். ஜெயக்குமார், மருத்துவர் அணி மாநில இணைச்செயலாளர் அனுமந்தன், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் , பெரியகுளம் நகர செயலாளர் பழனியப்பன், பெரியகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கழகத்தின் போர்வாள் அப்பாஸ் மைதீன், பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தவமணி கருப்பசாமி,ஒன்றிய துணைச் செயலாளர் செல்லப்பாண்டி, பேரூர் செயலாளர்கள் பாலமுருகன் ( வடுகபட்டி ), மனோகரன் ( தாமரை குளம் ), ஆண்டவர் ( தென்கரை), போடி மீனாட்சிபுரம் பேரூராட்சி தலைவர் திருப்பதி ,பெரியகுளம் நகர அம்மா பேரவை செயலாளர் ஜெயசீலன் உட்பட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் .
செய்தி: செந்தில்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.