தேனி பழனிசெட்டி பட்டியில் கலைஞர் படிப்பகம் திறப்பு விழா
தேனி மாவட்டம், தேனி திமுக வடக்கு மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் மிதுன்சக்ரவர்த்தி ஏற்பாட்டில் கலைஞர் படிப்பகம் பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இந்த கலைஞர் படிப்பகம் திறப்பு விழா 2.8.2026 அன்று தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்.பி., தலைமையில் நடைபெற்றது. பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் மிதுன்சக்ரவர்த்தி முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலைஞர் படிப்பகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து ஓ.பி.எஸ் பன்னீர்செல்வம்., மற்றும் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் படிப்பகத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து புத்தகங்களை பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் ஆர்.டி.கணேசன், போடி லட்சுமணன், மாவட்ட துணைச்செயலாளர் திருக்கண்ணன், நகர செயலாளர்கள் சூர்யா பாலமுருகன், போடி புருஷோத்தமன், ஒன்றிய செயலாளர்கள் வீரபாண்டி ரத்தின சபாபதி, அய்யப்பன், பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு, திமுக பிரமுகர்கள் முருகேசன், வீரபாண்டி சசி, அல்லிநகரம் முனியாண்டி உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: பாலகுரு
கருத்துகள் (0)
Be the first to comment on this article.