மாவட்ட செய்திகள்

கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டத்திற்கு பொதுமக்கள் வியாபாரிகள் எதிர்ப்பு

கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டத்திற்கு பொதுமக்கள் வியாபாரிகள் எதிர்ப்பு

       கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் முன்னறிவிப்பின்றி அம்மா உணவகம் மற்றும் கடைகள் எடுப்பது தொடர்பாக வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

          திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தளமாக இருந்து வரக்கூடிய நிலையில் கொடைக்கானலில் முக்கிய பகுதியாக இருப்பது ஏரி சாலை அருகே இருக்கக்கூடிய கலையரங்கம் பகுதி இந்த கலையரங்கம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது .

         இந்த கடைகளை வைத்து தினமும் தங்களுடைய வாழ்வாதாரத்தை நகர்த்தி வரக்கூடிய கடைக்காரர்கள் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இதே பகுதியில் கடைகளை வைத்திருக்கிறார்கள் இந்த நிலையில் மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டம் வருவதற்கான சாத்திய கூறுகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்புகள் தொடர்ந்து வந்த நிலையில் திடீரென்று நகராட்சி சார்பாக இன்று இந்த பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை இடிக்க துவங்கி உள்ளனர் அம்மா உணவகத்தை இடிக்க துவங்கியதால் அடுத்தபடியாக தங்களுடைய கடைகளையும் இடிக்க வருவார்கள் என தயக்கம் காட்டிய வியாபாரிகள் மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டத்தை அமல்படுத்தினால் இப்பகுதியில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் முழுமையாக தங்களுடைய வாழ்வாதாரத்தை இழக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது .

         மேலும் இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று கோஷங்கள் எழுப்பி வந்த நிலையில் அம்மா உணவகத்தை இடிக்கத் துவங்கியவுடன் இந்த பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கடைகளை கடை உரிமையாளர்கள் அடைத்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் மல்டி லெவல் கார் பார்க்கிங் திட்டத்தை உடனடியாக நிறுத்தவில்லை என்றால் பெரும் போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்துள்ளனர்

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.