மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் பேகம்பூரில் நீதிபதி ஜி.ஆர் சாமிநாதனை கண்டித்து தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் பேகம்பூரில் நீதிபதி ஜி.ஆர் சாமிநாதனை கண்டித்து தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

           திண்டுக்கல் பேகம்பூர் காயிதே மில்லத் திடலில் இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கும் நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் அவர்களின் தீர்ப்பை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சேக்பரீத், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

         மேலும் இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் யாசர் அராபத், நிர்வாக குழு உறுப்பினர் முகமது ரிஜால் வரவேற்புரை நிகழ்த்தினர். மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் பழனி பாரிக் அப்துல்லா மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கண்டன உரை நிகழ்த்தினர்.

         கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திமுக 39 வது வார்டு செயலாளர் அசன் முகமது, 40வது வார்டு செயலாளர் சுருளி இஸ்மாயில் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.