விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் நதிக்குடி கிராமம் அருகே நாக்பூர் உரிமம் பெற்ற தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 க்கு மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமானது. தீயணைப்பு துறையினர் தீயை அனைக்கும் பணியினை மேற்கொண்டனர்
ராஜம்மாள் வயது 65 பலத்த காயம் அடைந்தார். தகவலின் பேரில் மாறனேரி காவல்துறையினர் ராஜமாவை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ஆண்டாள் ஆலங்குளம் குறுவட்ட ஆய்வாளர் ராஜா நதிக்குடி கிராம நிர்வாக அலுவலர் முருகன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.