அமமுக பொது செயலாளர் தினகரன் கவர்னரிடம் கடிதம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழ்நாடு கவர்னர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கடிதம்.
மேலும் அ.ம.மு.க எம்.எல்.ஏ-வை காணவில்லை என ஆளுநரை சந்தித்த பின் டிடிவி தினகரன் பேட்டி, அவர் கூறியதாவது குதிரை பேரம் நடப்பதாக சந்தேகிப்பதாகவும், அ.ம.மு.க எம்.எல்.ஏ த.வெ.க.விற்கு ஆதரவளிப்பதாக போலியான கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கையெழுத்திட்டு கடிதம் அனுப்பிய பிறகு அ.ம.மு.க எம்.எல்.ஏ-வை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் . ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஊழலில் ஈடுபடுகிறார் என்றும் எங்கள் கட்சியின் கடிதத்தையும் கையெழுத்தையும் போலியாக தயாரித்து ஆளுநரிடம் தங்களுக்கு ஆதரவாக கொடுத்திருக்கிறார் என டிடிவி தினகரன் கூறினார்
செய்தி: ஆசிரியர் & வெளியீட்டாளர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.