அரசியல்

திண்டுக்கல் மாவட்டம் - வேடசந்தூர் தொகுதி அ.தி.மு.க வினர் பலர் த.வெ.க வில் இணைந்தனர்

வேடசந்தூர் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் த.வெ.க.,வில் இணைந்தனர்.

      வேடசந்தூர் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், திண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளருமான தென்னம்பட்டி பழனிச்சாமி அவர்கள் தலைமையில்,குஜிலியம்பாறை அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன்,

          குஜிலியம்பாறை முன்னாள் அ.தி.மு.க., ஒன்றிய தலைவர் காஞ்சனா பாண்டியன் குஜிலியம்பாறை காங்கிரஸ் வடக்கு வட்டாரத் தலைவர் தர்மர், வேடசந்தூர் ஒன்றிய அவைத் தலைவர் புதுரோடு ஒத்தக்கடை ஆறுமுகம்,

              டி. கூடலூர் கூட்டுறவு சங்கத் முன்னாள் தலைவர் ஸ்டாலின் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர்,தங்களது கட்சிகளில் இருந்து விலகி, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

          அனைவரும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இல்லத்தில் அவரது முன்னிலையில் த.வெ.க வில் இணைத்து கொண்டனர்

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.