திண்டுக்கல்லில் மசாஜ் சென்டர்களில்(SPA) ஹைடெக் விபச்சாரம் - பெண் உட்பட 3 பேர் கைது - 4 அழகிகள் மீட்பு
திண்டுக்கல் நகர் பகுதியில் மசாஜ் சென்டர்களில் (SPA) ஹைடெக் விபச்சாரம் நடைபெறுவதாக மாவட்ட S.P.பிரதீப் அவர்களுக்கு புகார் வந்ததை தொடர்ந்து நகர் DSP கார்த்திக் மேற்பார்வையில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் வாணி, அனுசுயா மற்றும் காவலர்கள் அக்ரஹார சாலை மங்கை டவர்-ல் உள்ள மசாஜ் சென்டரில்(SPA)-ல் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து அங்கு அழகிகளை ஹைடெக் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சென்னை, கிண்டியை சேர்ந்த பத்மா(37), திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த சுரேஷ்(44), வடமதுரை, வேல்வார்கோட்டையை சேர்ந்த சாமிநாதன்(50) ஆகிய 3 பேரை கைது செய்து 4 அழகிகளை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தி: குருபாண்டியன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.