மாவட்ட செய்திகள்

தேனி மாவட்ட த.வெ.க தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தலைமையில் அரப்படித்தேவன்பட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியிடம் வீட்டு மனை பட்டா கேட்டு கோரிக்கை மனு

தேனி மாவட்ட த.வெ.க தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தலைமையில் அரப்படித்தேவன்பட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியிடம் வீட்டு மனை பட்டா கேட்டு கோரிக்கை மனு

          தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், குன்னூர் கிராமம் சர்வே எண்கள்.1221/2, 1222/1 உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு இல்லாத பட்டியல் இன சமூக மக்களுக்கு பட்டா வேண்டி பல நாட்களாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து 40 பயனாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட ஊராட்சி மன்ற கூட்டத்தில் கடந்த 12.12.2024-ம் தேதி அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

          அதன் அடிப்படையில் மேற்படி நிலத்தை ஆண்டிபட்டி நில அளவையர் ஆய்வு செய்து ஆண்டிபட்டி வட்டாட்சியர் அவர்களுக்கு ஓ.மு.எண்.4535/2025-ஆ2-ன்படி நடவடிக்கை எடுத்து வருவதாக வட்டாட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிப்பதாகவும், மேலும் அவர்கள் பல ஆண்டுகளாக ஒரே வீட்டிற்குள் கூட்டுக் குடும்பமாக நீண்ட காலமாக சிரமப்பட்டு வாழ்ந்து வரும் எங்கள் மீது கருணை கொண்டு மேற்படி சர்வே நம்பரில் உள்ள நிலத்தை பட்டியல் இன சமுதாய மக்களுக்கு வீட்டுமனையிடமாக வழங்க உத்தரவு வழங்கி உதவ வேண்டும் என த.வெ.க தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி மற்றும் த.வெ.க நிர்வாகிகள் ஹரிஹரன்,சங்கர் ஆகியோர் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

செய்தி: இளையவன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.