பழனி முருகன் கோவில் பெருந்திட்டப் பணிகளின் திறப்பு விழா பேனர்களில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பெயர் விடுபட்டதால் பரபரப்பு
பழனி முருகன் கோவில் பெருந்திட்டப் பணிகளின் திறப்பு விழா பேனர்களில், உள்ளூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவிமனோகரன் பெயர் விடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்துத் தெரிந்ததும், அவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிதான் என அதிகாரிகளைக் கடிந்து கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், எம்.எல்.ஏ-விடம் நேரில் வருத்தம் தெரிவித்தார்.
பழனியில் நடைபெற்ற அலங்கார நுழைவு வாயில் மற்றும் ராக்கால நந்தவனம் திறப்பு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகப் பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிமனோகரன் வருகை தந்திருந்தார். ஆனால், விழா நுழைவு வாயில் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரசுப் பேனர்களில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ ரவிமனோகரன், விழா மேடைக்குச் செல்லாமல் நிகழ்விடத்தின் ஒரு பகுதியில் ஒதுங்கி நின்றார்.
உடனிருந்த அதிமுகவினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் இந்த விவகாரத்தை உடனடியாக விழாத் தலைவரான இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். தொடர்ந்து,அமைச்சர் ரமேஷ், அங்கிருந்த கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் திருக்கோவில் அதிகாரிகளை உடனடியாக நேரில் அழைத்து எச்சரித்தார். அவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதிதான், அரசு விழாக்களில் ஏன் அவரது பெயரைப் போடவில்லை எனக் காரசாரமாகக் கடிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ஒதுங்கி நின்ற பழனி சட்டமன்ற உறுப்பினர் ரவிமனோகரன் அவர்களிடம் அமைச்சர் ரமேஷ் நேரில் சென்று, அதிகாரிகளின் இந்தத் தவறுக்காகத் தனது, வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
இதனை தொடர்ந்து
பழனி பகுதியில் சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறுகடை வியாபாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர், எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் பாத்துட்டு செய்து தருகிறேன் என வியாபாரிகளிடம் கூறினார்
செய்தி : சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.