வேதனையின் உச்சத்தில் கம்பம் உழவர் சந்தை விவசாயிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க CPI.ML.மாஸ் லைன் மாவட்டச் செயலாளர் கோரிக்கை
கம்பம் உழவர் சந்தை விவசாயிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க CPI.ML.மாஸ் லைன் மாவட்டச் செயலாளர் கோரிக்கை
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினினிஸ்ட்) மாஸ் லைன் தேனி மாவட்ட குழு சார்பில், மாவட்ட செயலாளர.ஜோதி பாண்டிகண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் விவசாயிகள் தங்களது கடின உழைப்பால் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யாமல், அடிமாட்டு விலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுவதால், தரமான காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல், மூன்றாம் தரமான காய்கறிகளை மட்டுமே கம்பம் உழவர் சந்தையில் விற்பனை செய்ய வேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால், கம்பம் உழவர் சந்தையைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான தனியார் கடைகளில், உழவர் சந்தை நிர்ணயிக்கும் விலையைவிட இரு மடங்கு அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அது மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் அண்டை மாநிலமான கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அப்படியானால்,
விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இந்த விலை நிர்ணய அநீதி?
தனியார் வியாபாரிகளின் வணிகம் செழிக்கும்போது, உழவர் சந்தை விவசாயிகள் மட்டும் நஷ்டத்தில் தத்தளிப்பது ஏன்?
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய வேளாண்துறை அதிகாரிகளே, விவசாயிகளின் வேதனையைப் புரிந்துகொள்ளாமல் அதிகார மமதையில் செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது!
எனவே, மாவட்ட வேளாண்துறை நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு கம்பம் உழவர் சந்தையில் காய்கறிகளுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து விலை நிர்ணய நடைமுறையைச் சீரமைக்க வேண்டும். விவசாயிகளின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்படும் அலுவலர் உள்ளிட்ட அனைத்து சம்பந்தப்பட்ட உழவர் சந்தை அலுவலர்களையும் உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். விவசாயிகளை வஞ்சிக்கும் அதிகாரிகளுக்கு உழவர் சந்தை எதற்கு?
என்ற கேள்வியையும் முன் வைக்கிறோமென அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி: G.ராஜா
கருத்துகள் (0)
Be the first to comment on this article.