புகார் செய்திகள்

சின்னமனூர் நகர சர்வேயரை தாக்கிய நாள்வர் மீது மேல் நடவடிக்கை எடுக்க கோரி தேனி மாவட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக ஆர்ப்பாட்டம்

சின்னமனூர் நகர சர்வேயரை தாக்கிய நாள்வர் மீது மேல் நடவடிக்கை எடுக்க கோரி தேனி மாவட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் நகராட்சி நகர சார் ஆய்வாளர் ஜெகன்குமார் புல தணிகைக்காக சென்ற போது சின்னமனூர் ஒன்றியத்தைச் சேர்ந்த நான்கு நபர்கள் சில நாட்களுக்கு முன்பு கொடூரமாக தாக்குதல் நடத்தினர்.

        இந்நிலையில் தாக்கப்பட்ட ஜெகன்குமார் தேனி க.விளக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

       இதனை தொடர்ந்து சின்னமனூர் காவல் நிலையத்தில் சர்வேயரை தாக்கியவர்கள் மீது Crime No. 497/2026-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு பல நாட்களாகியும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறையினர் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் வேல்முருகன் மாவட்ட செயலாளர் சேதுபதி ராஜா ஆகியோர் தலைமையில் நில அளவை அலுவலர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

      மேலும் அந்த மனுவில் சம்பந்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து நில அளவைப் பணியாளர்களை பாதுகாத்து உதவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

செய்தி: இளையவன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.