புகார் செய்திகள்

ஆற்காட்டில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கோரிக்கை மனு

ஆற்காட்டில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கோரிக்கை மனு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாகவும், இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

        மேலும், கஞ்சா விற்பனையால் குற்றச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறி, கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஆற்காடு நகர பொருளாளர் அருள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

        ஆற்காடு நகரில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி: மணிகன்டன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.