இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடல், தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள அவரது சொந்தப் பண்ணைத் தோட்டத்தில் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது
தமிழ் திரையுலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடல், தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள அவரது சொந்தப் பண்ணைத் தோட்டத்தில் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாரதிராஜாவின் உடலுக்குத் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்
கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா, நிரோஷா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் ராம், பார்த்திபன், பாக்கியராஜ், ஆர்.கே.செல்வமணி, சித்ரா லட்சுமணன், சினேகன், விக்னேஷ், கருணாஸ், தாமு, நிழல்கள் ரவி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்
மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.நிர்மல் குமார், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் என பலமுக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்
இறுதியாக பாரதிராஜாவின் உடல் காவல்துறையினரின் மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டது. திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சசி மோகன் மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது # அரசு மரியாதையில் 21 குண்டுகள் மற்றும் 72 குண்டுகள் முழங்கப்பட்டு வருகிறது.அரசியல் பதவிகளை வகித்தவர்களுக்கு ராணுவ முறைப்படி 21 குண்டுகள் முழங்க இறுதிச்சடங்கில் மரியாதை செலுத்தப்படும்.
72 குண்டுகள் என்பது நாட்டின் உயரிய கலைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், நாட்டின் தலைசிறந்த ஆளுமைகளுக்கு 72 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படும். அந்த வகையில், பத்மஸ்ரீ போன்ற நாட்டின் உயரிய விருதுகளை பெற்ற பாரதிராஜாவுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.