மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சத்தியமித்திரன் மாத இதழ் 5 ஆம் ஆண்டு விழா !!!

சத்தியமித்திரன் மாத இதழ் சார்பாக சாதனையாளர்கள் கெளரவிக்கும் விழா நடைபெற்றது

        சத்தியமித்திரன் வார இதழின் 5 ஆம் ஆண்டு விழா பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்கள் கெளரவிக்கும் நிகழ்ச்சியாக 29.5.2026 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் தனியார் மஹாலில் சத்ய மித்திரன் இதழின் ஆசிரியர் வேதம் ராஜீ தலைமையில் நடைபெற்றது.

        இந்த விழாவில் துணை ஆசிரியர் நகராஜன்,சத்தியமித்திரன் மாத இதழின் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் புருஷோத்தமன், மாநிலச் செயலாளர் நாராயணராஜா, மாநில பொருளாளர் தங்கபாண்டியன், மாநிலத் துணைச் செயலாளர் பிரதீப், சங்கத்தின் மாநில செய்தி தொடர்பு அலுவலரும் சத்தியமித்திரன் இதழின் மண்டல தலைருமான முத்துராமன், தலைமை ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மணிகண்டன், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சுபாஷ் மற்றும் அவரது சங்க நிர்வாகிகள், திரைப்பட இயக்குனர்கள் அரவிந்தராஜ், பன்னீர் செல்வம் நடிகர் சிங்கராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

         இந்த நிகழ்வில் பல பத்திரிகைகளின் ஆசிரியர்கள், செய்தியாளர்கள், மூத்த செய்தியாளர்கள் சிறப்பு அழைப்பாளரர்களாக கலந்து கொண்டனர். மேலும் கலை நிகழ்சிகள் நடைபெற்றது, இதில் கால்களில் உள்ள விரல்களை மட்டும் தரையில் ஊண்டி பாதம் தரையில் படாமல் பல பாடல்களுக்கு ரோஸினி என்ற மாணவி நடனம் ஆடி அனைவரது பாராட்டினை பெற்றார்.

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.