அதிமுக தோல்வியால் உயிரை விட்ட நிர்வாகி. ரூ.55,00,000 நிவாரணம். குழந்தையின் படிப்பு செலவையும் ஏற்பதாக இபிஎஸ் அறிவிப்பு..!!
இந்நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த கே.எஸ். பூக்கடை மகேந்திரன் என்பவர் கட்சி ஒன்றுபட வேண்டும் என்றும், அதிமுக தோல்வி விரக்தி அளிப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டுவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ''நான் இறந்து விடுவேன். என்னுடைய உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்த வேண்டும்'' என மகேந்திரன் அந்த வீடியோவில் உருக்கமாக தெரிவித்திருந்தார். அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது
இந்நிலையில் மகேந்திரனின் உடல் உடற்கூறாய்வுக்கு பிறகு தஞ்சை திருப்பனந்தாள் பகுதியில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ் ஆகியோர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கட்சிக்காக உயிரை விட்டுட்டான் சாமி என மகேந்திரனின் குடும்பத்தார் எடப்பாடியிடம் கதறினர். மகேந்திரனின் குழந்தையின் படிப்பு செலவுகளை அதிமுக ஏற்கும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள நிலையில் குடும்ப நிதியாக ரூ.55 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் மகேந்திரன் மரணத்திற்கு அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
செய்தி: ஆசிரியர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.