மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் முதல்வர் விஜய் பிறந்த நாளை 52 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய தவெக வினர்

கள்ளிமந்தயத்தில் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு 52 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய தவெக நிர்வாகிகள்

         திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி தொப்பம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிமந்தயம் ஊராட்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன் தலைமையிலும் , தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சின்ராஜ் முன்னிலையிலும் , 52 கிலோ கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்கள்.

        மேலும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம், மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வெகு விமர்சையாக கொண்டாடினார்கள் .

         அதனைத் தொடர்ந்து கள்ளிமந்தயம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் சிஎஸ்ஐ ஆரம்பப்பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவ செல்வங்களுக்கு நோட்டு, பேனா, எழுதும் உபகரணங்கள் போன்றவற்றினை வழங்கி சிறப்பித்தார்கள்.

          இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிபாலன், தவெக நிர்வாகிகளான ஜே.பி.எஸ்.சக்தீஷ்குமார் , சிவா, மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றியம், கிளை , தவெக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

          முன்னதாக கலந்து கொண்ட அனைவருக்கும் மாலை மரியாதை செய்தும் சால்வை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

செய்தி: வேலுச்சாமி

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.