மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் 300-க்கும் மேற்பட்ட பாஜக வினர் கட்சியில் இருந்து விலகல்

அண்ணாமலைக்காக பாஜகவை விட்டு விளகி 300 நிர்வாகிகள் அப்சட்டில் நயினார் நாகேந்திரன் !!!

      தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அண்ணாமலை தொடங்கிய 'We The Leaders' இயக்கம் வேகமாக ஆதரவை குவித்து வருகிறது.

       இதனை தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலைக்கு பிரதமர் மோடியின் ஆதரவு இல்லை என்று தெரிவித்திருந்தாலும், அவரது புதிய இயக்கத்திற்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

        திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். பழனியில் முன்னாள் மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகிய அவர்கள், அண்ணாமலையின் We The Leaders இயக்கத்தில் இணைவதாக அறிவித்துள்ளனர்.

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.