மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மைதானத்தில் 287 பள்ளி வாகனங்கள் மாணவர் பாதுகாப்பு உறுதி செய்ய கூட்டாய்வு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மைதானத்தில் தேனி அல்லிநகரம் டி ஓ மெட்ரிக் சண்முகவேல் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சுந்தரராமன் வட்டாரப் போக்குவரத்து தனியார் பள்ளிகளின் வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

       தேனி மாவட்ட உத்தமபாளையம் வட்ட 41 பள்ளிகளில் போடி உத்தமபாளையம் தாலுகா பள்ளி வாகனங்களைக் கூட்டாய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது. இவ்வாய்வின்போது, பள்ளி வாகனத்தில் அவசர கால வழி (EmergencyExit Door), முதலுதவிப்பெட்டி, ஏறி இறங்கும் படிக்கட்டுகள், தீயணைப்பான் கருவி, வாகனத்தின் தரை பலகை (Plot form). கண்காணிப்புக் கேமரா உள்புறம் மற்றும் வெளிப்புறம், அவசர கால தொலைப்பேசி எண்கள் ஆகியன முறையாக உள்ளதா என்றும் மேலும், வேக வாகனத்தின் பிரேக்கின் திறன் போன்றவை ஆய்வு கட்டுப்பாட்டுக்கருவி மேற்கொள்ளப்பட்டது.

       ஆண்டுக்கு ஒருமுறை பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனங்களை கூட்டாய்வு மூலம் ஆய்வு செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில், இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி வாகன ஓட்டுநர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டும். பள்ளிவாகனத்தில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். வாகனத்தின் பின்புறம் பள்ளி நிர்வாகத்தின் தொலைப்பேசி எண், வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தின் தொலைப்பேசி எண், காவல் நிலைய தொலைப்பேசி எண், குழந்தைகள் பாதுகாப்பு எண் உள்ளிட்டவை நன்றாக தெரியும் வகையில் எழுதப்பட வேண்டும்.

      வாகனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகளை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் தமிழ்நாடு அரசு விதித்துள்ள வழிமுறைகளையும், சாலைப் பாதுகாப்பு விதி முறையாக பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும்.பள்ளி மாணவர்களை செல்வதால் வாகனங்கள் இயக்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆய்வுக்கு வராத வாகனங்களை பள்ளி திறப்பதற்கு முன்பாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

 செய்தி: பாலகுரு

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.