ஆன்மிகம்

தேனி பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோயிலில் 25ம் ஆண்டு கார்த்திகை தீபத்திருநாள் கொடியேற்றத்துடன் துவங்கியது

தேனி பெரியகுளம் கைலாசநாதர் மலைக் கோயிலில் 25ம் ஆண்டு கார்த்திகை தீபத்திருநாள் கொடியேற்றத்துடன் துவங்கியது

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெரியகுளம் அருகே அமைந்துள்ள கைலாசநாதர் திரு மலைக்கோவில்  24.11.2026 இன்று 25ம் ஆண்டு கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை கைலாசநாதருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் தீபாராதனையும் நடைபெற்றது

     அதனை தொடர்ந்து கோயில் ராஜகோபுரத்திற்க்கு அருகில் அமைந்துள்ள கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்களால் வேத மந்திரம் முழங்க  சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

பின்னர் திருக்கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் கைலாசநாதர் பெரியநாயகி அம்மனும் கோவிலை சுற்றி கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தனர்.

     அதனைத் தொடர்ந்து மலை உச்சியில் தீபம் ஏற்றவுள்ள தொட்டியில் 108 கிலோ நெய் நிறப்பும் நிகழ்வானது துவங்கப்பட்டது.

     இந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களது இளைய மகன் பிரதீப்,பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன், திருக்கோவிலின் செயல் அலுவலர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

       மேலும் சிவனடியார் சாதுக்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பை மற்றும் சிறப்பு அன்னதானத்தை பிரதீப் அவர்கள் வழங்கினார்.

      தீப திருநாளுக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்புக் குழுவினர் செய்திருந்தனர்.

    இந்த தீபத்திருநாளில் பக்தர்கள் கைலாசநாதர் திருக்கோவில் மலையை கிரிவலம் வந்து கைலாசநாதரை வழிபட்ட காட்சி திருவண்ணாமலையில் கிரிவலமும்  தீபத்திருநாள் பார்த்தது போல் காட்சியளிப்பதாக கலந்து கொண்ட பக்தர்கள் கூறிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: G.ராஜா

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.