ஆன்மிகம்

தேனி மேலப் பேட்டை இந்து நாடார் உறவின்முறை பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது

தேனி மேலப் பேட்டை இந்து நாடார் உறவின்முறை பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது

      தேனி மேலப் பேட்டை இந்த நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

      இரண்டாம் நாள் 11.10.26 திங்கள்கிழமை அன்னை பத்திரகாளி அன்னப் பூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருக்கோவிலின் தேவஸ்தான கமிட்டியின் சார்பாக திருக்கோவில் மண்டபத்தில் ஆயிரக்கணக்கான கொழு பொம்மைகள் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

        நவராத்திரி விழா பூஜையை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் நர்சரி & பிரைமரி பள்ளி நிர்வாகத்தின் சார்பாக தேனி மேலப் பேட்டை இந்து நாடார் உறவின் முறையின் தலைவர் ASG.தர்மராஜன், து.தலைவர் AS.ஜீவகன், பொது செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன் தலைமையிலும் பத்திரகாளி அம்மன் திருக்கோவில் செயலர்கள் காளிதாஸ் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமநாதன், பிரைமரி பள்ளியின் தலைமை ஆசிரியை கார்த்திகா தேவி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

       இந்த விழாவில் பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.மேலும் பள்ளிகளின் மானவ மானவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

       விழாவின் ஏற்பாடுகளை திருக்கோயில் தேவஸ்தான கமிட்டியினர் மற்றும் திருக்கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

செய்தி: இளையவன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.