விருவீடு அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளை அடித்த வழக்கில் 2 பேருக்கு சிறை தண்டனை
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த விருவீடு அருகே கடந்த 2019-ம் ஆண்டு வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகையை பறித்த வழக்கில் கமுதியை சேர்ந்த முனியன் மகன் சண்முகம்(45), பெரியகுளத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் செல்லமுத்து(32) ஆகிய 2 பேரை விருவீடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் முயற்சியால் இன்று விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் சண்முகத்திற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.10 ஆயிரம் அபராதமும் செல்லமுத்துக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.