மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் திரையரங்கில் காணாமல் போன தங்க செயினை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல் துறையினர்

திண்டுக்கல் திரையரங்கில் காணாமல் போன தங்க செயினை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்த திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர்

        திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு, அழக்குவார்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் அவரது மனைவி போதுமணி மற்றும் அவரது குழந்தை ஆகியோர் திண்டுக்கல் ராஜேந்திரா திரையரங்கிற்கு நேற்று இரவு (06.06.2026) சினிமா பார்ப்பதற்காக வந்தனர். அப்போது குழந்தையின் கழுத்தில் அணிந்திருந்த 1.1/4 பவுன் தங்க செயின் தவறி கீழேவிழுந்துவிட்டது. இதனை அறியாமல் வீட்டிற்கு வந்து விட்டனர். வீட்டுக்கு வந்து பார்த்தபோது செயின் காணாமல் போனது தெரிய வந்ததை தொடர்ந்து இன்று (07.06.2026 காலை செயின் காணாமல் போனது தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

         இதனை தொடர்ந்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் சம்பவம் நடந்த தியேட்டர் உள்ளே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போது மேற்படி காணாமல் போன தங்க செயின் தியேட்டர் உள்ளையே இருந்தது தெரிய வந்ததால் அதனை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.