தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய 5 தாலுகா அலுவலகங்களில் 1435-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி 16.6.2026 அன்று தொடங்கியது
உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது. இவற்றில் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள சின்னமனூர், பூலானந்தபுரம், கருங்காட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 166 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான இ.பட்டாக்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வில் துணை இயக்குநர் (தோட்டக்கலை) நிர்மலா, உதவி இயக்குநர் (நில அளவை) அப்பாஸ். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார். அலுவலக மேலாளர் (பொது)சுந்தர்லால், வட்டாட்சியர் பாலசண்முகம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதுபோல தேனி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பாதுகாப்பு வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலர் நல்லையா தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் தேனி வட்டத்திற்குட்பட்ட ஊஞ்சாம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உப்பார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 224 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது தேனி தாசில்தார் சதீஸ்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மாதவன், ராமச்சந்திரன், ஜீவா, காந்தி, சிவசங்கரி, தேனி சர்வேயர் கணேஷ் உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள உடனிருந்தனர்.
செய்தி: பாலகுரு
கருத்துகள் (0)
Be the first to comment on this article.