மாவட்ட செய்திகள்

தேனி சின்மைனூர் அப்பிபட்டியில் த.வெ.க சார்பாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது

தமிழக வெற்றி கழகம் சார்பாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர் களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது

             தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம் அப்பிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு 2025-2026 ஆம் கல்வியாண்டு பொது தேர்வில் முதல் மூன்று மதிப்பென் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தெற்க்கு மாவட்ட கிளையின் சார்பாக பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

          இந்த விழாவில் முதல் மதிப்பெண் பெற்ற செ.பார்கவி 461/500, இரண்டாவது மதிப்பெண் க.வெற்றிவேல் - 460/500 மூன்றாவது மதிப்பெண் மு.கௌரி - 451/500 பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

             இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற வைத்த உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. R.நித்யா பானு, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.காந்த செல்வி, அங்கன்வாடி பணியாளர் திருமதி. அனீஸ்பாத்திமா மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

          இந்த விழாவில் த.வெ.க வின் சின்னமனூர் ஒன்றியம் விக்னேஷ் அவர்கள் முன்னிலை, தெற்கு மாவட்ட மகளிர் அணியின் சார்பாக திருமதி,ஜமுனா மகேந்திரபாண்டி தலைமை வகித்தனர். இந்த நிகழ்வில் த வெ கவின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

           இதனை தொடர்ந்து தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்களது புகைப்படம் அப்பிபட்டி ஊராட்சி உயர்நிலை பள்ளிக்கு வழங்கப்பட்டது. நிகழ்சியின் நிறைவாக சின்னமனூர் ஒன்றியம் அப்பிபட்டி கிளை செயலாளர் விக்னேஸ்வரன் நன்றியுரை வழங்கினார்.

செய்தி: இளையவன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.