மாவட்ட செய்திகள்

தேனி கிழக்கு ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சியில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய த.வெ.க வினர்

தேனி தெற்கு மாவட்ட கிழக்கு ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சியில் கோவிலில் சிறப்பு அபிஷேகமும் அர்ச்சனையும் அன்னதானமும் வழங்கப்பட்டது

         தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி அறிவுறுத்தலின் படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட சின்னமனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் விக்னேஷ் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த ஜமுனா மகேந்திரபாண்டி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட கிழக்கு ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சி கிளைச் செயலாளர் வெங்கடேஸ் ஏற்பாட்டில்,

           தேனி தெற்கு மாவட்ட சின்னமனூர் கிழக்கு ஒன்றியம் அப்பிபட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் பெயரில் சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது 

செய்தி: இளையவன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.